ஸ்டெர்லைட் ஆலை எந்தக் காலத்திலும் திறக்கப்படாது என்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறித்து சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, எந்த காலத்திலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்க தமிழக அரசு அனுமதிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்து ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post