ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகததில் வனவிலங்குகள் கண்காணிப்பு மற்றும் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி கணக்கெடுப்பு பணி இன்று முதல் துவங்கி வரும் 23ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்த பணியில் வனத்துறை ஊழியர்கள் 230 பேர் 46 குழுக்களாக ஈடுபட்டுள்ளனர். வன விலங்குகளின் கால்தடம் மற்றும் எச்சத்தை அளவீடு செய்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்தமுறை மொபைல் செயலியை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post