கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள், ஆந்திரா மாநில எல்லையில் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்..
ஆந்திரா மாநிலத்திற்குட்பட்ட குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான குடிப்பள்ளி, சாந்திபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தி உள்ளன. மேலும், காட்டு யானைகள் தற்போது ராள்ளபுதுகூர் ஏரியில் முகாமிட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விளைநிலங்களில், தஞ்சமடைந்துள்ள யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
Discussion about this post