மேட்டூர் அணையின் நீர் தேக்கப் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் வனத்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் விரட்டினர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூரை ஒட்டி பாலமலை, கத்திரிமலை உள்ளிட்ட மலைகள் உள்ளன. இதேபோல் தமிழக கர்நாடக எல்லையில் பாலாறு வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. தற்போது நிலவும் கடும் வறட்சியின் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் மலையையொட்டியுள்ள மலை கிராமங்களுக்குள் வந்து விடுகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்ததையடுத்து, நீர் தேக்கப் பகுதியான பண்ணவாடியில் விவசாயிகள் மானாவாரி பயிரான சோளம் பயிரிட்டுள்ளனர். இங்குள்ள சோளப் பயிர்களை சாப்பிடவும், காவிரி நீரை குடிக்கவும் 3 குட்டிகள் உட்பட 14 யானைகள் முகாமிட்டிருந்தன. இதனையடுத்து மேட்டூர் வனத்துறை அலுவலர் பிரகாஷ் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.
Discussion about this post