கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த சின்னத்தம்பி யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. தடாகம் பகுதியில் கடந்த சில நாட்களாக அட்டகாசம் செய்து வந்த விநாயகா மற்றும் சின்னத்தம்பி ஆகிய இரு காட்டு யானைகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் விநாயகா யானையை பிடித்த வனத்துறையினர் டாப்ஸ்லிப் வனப்பகுதியில் அதை விட்டனர். இரண்டாவது கட்டமாக சின்னத்தம்பி யானையை பிடிக்கும் முயற்சியில், வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
இன்று காலை 6 மணிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் சின்னத்தம்பி யானையை வனத்துறையினர் இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்தனர். சின்னத்தம்பியின் உடலில் தடம் கண்டறியும் கருவி பொருத்தப்பட்டு, முதுமலை டாப்சிலிப் பகுதியில் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
Discussion about this post