சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல மாதங்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் சோழிங்கநல்லூர், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, பனையூர் பகுதிகளில் மழை பெய்தது. புறநகர் பகுதிகளான கானத்தூர், கேளம்பாக்கம், படூர், தையூர், திருப்போரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் திடீர் மழை பெய்தது. பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில் இந்த மழையானது மக்களைகுளிர்வித்தது.இதேபோலபோரூர்,அய்யப்பன்தாங்கல்,பூந்தமல்லி,உள்ளிட்டஇடங்களிலும்பரவலாகமழைபெய்தது.மேடவாக்கம்,பள்ளிக்கரணை,மீனம்பாக்கம்,பட்டினப்பாக்கம்,அடையாறு உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்துள்ளதாகவும் இதே நிலை ஓரிரு நாட்கள் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post