உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான 42 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 42 வது லீக் போட்டியில், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி குல்பாதீன் நையீப் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றுள்ள் மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்துள்ளது.
அதேபோல், விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள ஆஃப்கானிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற தீவுரம் காட்டி வருகிறது. இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்ட நிலையில், தங்களது கடைசி லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. லீட்ஸில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 34.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
Discussion about this post