உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 269 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 34 வது லீக் போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது. மான்செஸ்டரில் நடந்து வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி தொடக்க வீரராக களம் இறங்கிய ரோஹித் ஷர்மா 18 ரன்களிலும், அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கேல்.எல்.ராகுல் 48 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடர்ந்து களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 72 ரன்களிலும், அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 46 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய தோனி 56 ரன்கள் எடுத்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில், இந்தியா7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் விளையாடி வருகிறது.
Discussion about this post