ஏன் உங்களுக்கு Coffee மீது இப்படி ஒரு காதல் ?

சர்வதேச Coffee தினமானது ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 29 மற்றும் அக்டோபர் 1 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. Coffee க்கு என்று எதற்கு தினம் ?

நீங்கள் எங்கு, யாரை பார்க்கச் சென்றாலும் சரி, அவர்கள் முதலில் கேட்பது, Coffee சாப்பிடுகிறீர்களா என்றுதான். அதேபோல், எந்த ஒரு விஷேஷமாக இருந்தாலும் சரி, நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, Coffee உடன்தான் தொடங்கும். வாழ்க்கையை காபியை சுவைப்பது போல சுவைக்க வேண்டும் என்பார்கள். காஃபியின் சுவையே, அதை மெதுவாக ரசித்து அருந்துவதில்தான் இருக்கிறது. அன்றைய கால கடுங்காப்பியிலிருந்து, இன்றைய தினத்தின் கேபுசினோ(capuchino) வரையில், காஃபியின் எல்லா வகைகளுமே எல்லோருக்கும் ஃபேவ்ரெட் தான்.

ஏழை முதல் பணக்காரர் வரை, இந்த கருப்பு நிறத்தழகின் போதைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. ஒரு நாளில், பத்து தடவைக்கு மேல் காஃபி குடிப்பவர்களைக் கூட நாம் பார்க்கிறோம். என்ன தான் காலாச்சார மாறுபாடுகள் வந்தாலும், வீட்டிற்கு வந்தவர்களை காஃபி கொடுத்து உபசரிக்கும் வழக்கம் நம்மிடையே மாறாமல் தான் இருக்கிறது.

இன்றைய கால கட்டத்தில், மனிதர்கள் தங்கள் கைப்பிடி இதயத்திற்குள் கடலென பொங்கி வழியும் துயரங்களை வடிக்க வடிகால்கள் இல்லாமல் போனது. அந்த வடிக்காத துயரங்களை, வடித்த காபியை பருகிக்கொண்டே, தன் பாசத்திற்குரியவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது, மனம் லேசாகிறது.

அலுவலகங்கள், பார்ட்டிக்கள், மால்கள் என, காஃபி கலக்காத இடமே கிடையாது. காஃபிக் கடைகள் எல்லாம் மாறி, இன்று காஃபி ஷாப்கள் வந்து விட்டது. அதிகமாக பொழுதைக் கழிக்க சிறந்த இடங்களில் ஒன்று காஃபி ஷாப். இப்போது சூடு பிடிக்கும் பிஸ்னஸுகளில் முக்கியமானதாகவும் மாறிவிட்டது.

இன்றைய இளைய தலைமுறையினரின் நட்பும், காதலும், பெரும்பாலும், காஃபி சாப்பிடலாமா? என்ற வார்த்தையிலேயே துவங்குகிறது.

இப்படி காஃபி நமக்களித்த அனுபவங்கள் எண்ணிலடங்காதவை. சிலர் காஃபி உடலுக்கு நலமானதா என விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்களுக்கு காஃபியின் மீதான காதல் சற்றும் குறைந்ததாக தெரியவில்லை. சர்வதேச காஃபி தினமான இன்று நாமும் ஒரு கப் காஃபி எக்சட்ராவா சாப்பிட்டு, காஃபி நாளை கொண்டாடுவோம்…

Exit mobile version