நீங்கள் coffee lover என்றால் இதை அறிந்துகொள்ளுங்கள்..

பணி நேரத்தில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் போது நம் சோர்வை நீக்க காஃபியை அருந்துகிறோம்.சிலரால் காஃபி குடிக்காவிட்டால் பணியை தொடங்க முடியாது.அந்த அளவுக்கு coffee lover-ஆக இருப்பார்கள்.ஆனால், புத்துணர்ச்சி அளிக்கும் காஃபியில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

நோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது :

காஃபி குடிப்பதால் ஞாபக மறதி நோயை வரவிடாமல் தடுக்கும் என சில ஆய்வுகள் கூறுகிறது.அதனால் காஃபியை அருந்துங்கள் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மன அழுத்தத்தை குறைக்கும்:

ஒரு நாளைக்கு 4 காஃபிக்கு மேல் பருகினால் நம் மனதில் இருக்கும் அழுத்தங்கள் குறைந்துவிடும் என ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.அதே போல் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்களையும் குறைக்கும் என கூறுகிறார்கள்.

தசை வலியை நீக்கும் :

காஃபி குடிப்பதன் மூலம் தசை வலிகள் சரியாகும் என ஜார்ஜியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நன்மை தரும் காஃபி என்பதால் நாம் அதிகம் உட்கொள்ள கூடாது.’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ‘ என்பதை அறிந்து அளவாக எடுத்துக்கொள்வதே உடல் நலத்திற்கு நல்லது.

Exit mobile version