ஹத்ராஸ்: பெண்ணின் உடல் இரவோடு இரவாக எரிக்கப்பட்டது ஏன்? – உ.பி.அரசு விளக்கம்

பெரும் கலவரங்களை தவிர்க்கவே, ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இறந்த பெண்ணின் உடலை அவரது பெற்றோர்களின் சம்மதத்துடன் தகனம் செய்ததாக, உச்சநீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இறந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, அவசர அவசரமாக இளம்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, உத்தரபிரதேச அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், இளம்பெண்ணின் மரணத்தை வைத்து சில அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கலவரத்தை தூண்ட திட்டமிடுவதாக உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், கலவரத்தை தவிர்க்கவே இளம்பெண்ணின் பெற்றோர் சம்மதத்துடன் இரவோடு இரவாக உடல் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version