ManVsWild பியர் கிரில்ஸுக்கு இப்படி ஒரு நிலைமையா ?

ManVsWild நிகழ்ச்சியின் தொகுப்பாளரான பியர் கிரில்ஸ் தேனியால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வெளியாகிவுள்ளது.

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி ManVsWild.அந்த நிகழ்ச்சியின் பலமே பியர் கிரில்ஸ் தான். சமீபத்தில் பிரதமர் மோடி, பியர் கிரில்ஸுடன் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவிற்கு சென்ற நிகழ்வு ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஒளிப்பரப்பாகி அனைவராலும் பேசப்பட்ட ஒன்றாகும்.

இந்நிலையில் வனவிலங்குகளின் நண்பான பியர் கிரில்ஸுக்கு இப்படி ஒரு நிலைமையா என அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது அவரின் புகைப்படம்.

ஆம் தேனி ஒன்றால் பியர் கிரில்ஸ் கடுமையாக தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவில் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிந்த போது தான் இவரை தேனி தாக்கியுள்ளது.சிகிச்சை முடிந்தவுடன் மீண்டும் பியர் கிரில்ஸ் தனது பணியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version