திமுக என்றாலே நினைவுக்கு வருவது ஊழல் தான். அந்த ஊழலின் ஊற்றுக்கண்ணை உலகிற்கு அடையாளம் போட்டுக் காட்டியது சர்க்காரியா கமிஷன்.
சர்க்காரியா கமிஷன் என்றால் என்ன? எதனால் அது போடப்பட்டது? அதில் என்னவெல்லாம் சொல்லப்பட்டுள்ளது என்பதை இன்றைய இளைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ள வேண்டியது ஜனநாயக கடமை. இதோ சர்க்காரியாவின் பக்கங்கள்..
1971 காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்த திமுகவின் கருணாநிதி செய்த ஊழல்களை அம்பலப்படுத்த 1976-ல் அமைக்கப்பட்டது ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா கமிஷன். பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்ட அந்த அமைப்பு கருணாநிதியும் அவரது அமைச்சரவை சகாக்களும் செய்த விஞ்ஞான ஊழல்களை பட்டியலிட்டது. முதலாவதாக தனியார் சர்க்கரை ஆலைகளிடம் இருந்து, சர்க்கரையை கொள்முதல் செய்ய சுமார் 13 லட்ச ரூபாயை கருணாநிதியும், அவரது அமைச்சரவை சகா சண்முகமும் இடைத்தரகர் மூலம் கையூட்டாக பெற்றதாக குற்றம் சாட்டியது.
விவசாய நிலங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் பூச்சிமருந்து தெளிக்க மத்திய அரசு திட்டமிட்டது. அப்போது கருணாநிதி அமைச்சரவையில், இருந்த அன்பில் தர்மலிங்கம், மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றிற்கு தனது தனிப்பட்ட செல்வாக்கை பூச்சி மருந்து தெளிப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றுத் தந்தார். தங்கள் நிறுவனத்தை பரிந்துரைத்தற்காக தனியார் நிறுவனம், திமுகவினருக்கு லஞ்சம் வழங்கியதாகவும் அன்பில் தர்மலிங்கம் மட்டும் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் சர்காரியா கமிஷன் கூறியுள்ளது. இதில் கருணாநிதியின் பங்கு 25 ஆயிரம் ரூபாய் சர்காரியா கமிஷன் தெரிவித்துள்ளது.
இதேபோல் சென்னை அண்ணாசாலையில் இருந்த கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து அதில் குளோப் தியேட்டரை நடத்திவந்த வரதராஜபிள்ளை, அதனைத் தனக்கே சொந்தமாக்க திட்டமிட்டு அன்றைய ஆட்சியாளர்களை அணுகினார். வரதராஜ பிள்ளையிடம் பல ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்ற கருணாநிதி, குத்தகைக்கு இருந்தால் அந்த இடத்தை சம்பந்தப்பட்டவர் உரிமையாக்கிக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு குத்தகைதாரர் சட்டத்தை இயற்றினார் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்தப் புகாரை விசாரித்த சர்காரியா கமிஷன், கருணாநிதி பணம் பெற்றிருக்க முகாந்திரம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மதுரை மாவட்ட திமுக அறக்கட்டளை, பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை, அண்ணா அறக்கட்டளை, முத்துவேலர் அறக்கட்டளை உள்ளிட்ட அறக்கட்டளைக்கு லட்சக்கணக்கில் பணம் வந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளதுடன், எதற்காக பணம் செலுத்தப்பட்டது, யார் செலுத்தினார்கள் உள்ளீட்ட விவரங்கள் தெளிவாக இல்லை எனவும் சர்காரியா கமிஷன் தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.
அனைத்து ஊழல்களையும் தெளிவாக திட்டமிட்டு செய்து, சட்டத்தின் கிடுக்குப்பிடியில் இருந்து கருணாநிதி தப்பித்துள்ளார். அதனால் தான் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என அவர் அழைக்கப்படுகிறார்
Discussion about this post