தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காகவே ஸ்டாலின் அடிக்கடி கொளத்தூர் தொகுதிப்பக்கம் வந்து செல்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராமை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் மேயராக இருந்தபோது எதுவும் செய்யாமல், வெற்றிபெற வேண்டுமென்பதற்காக கொளத்தூர் தொகுதிப்பக்கம் வந்துசெல்வது சந்தர்ப்பவாதம் என்று விமர்சித்தார்.
மக்களிடம் மனுக்கள் வாங்கி, ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் நாடகமாடுவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார். திமுகவினர் 30 வருடத்திற்கு முன்பு மக்களை ஏமாற்றியதுபோல, இன்றைய விஞ்ஞான உலகில் ஏமாற்ற முடியாது என்றும் முதலமைச்சர் கூறினார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கொளத்தூர் தொகுதியிலேயே மக்கள் முன்னிலையில் நேருக்குள் நேர் விவாதிக்க தயாரா என ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சவால் விடுத்தார். யார் ஆட்சியில் ஊழல் நடந்தது என மக்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்கட்டும், விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பினார்.
Discussion about this post