பிப்ரவரி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். பிப்ரவரி 14ம் தேதி சர்வதேச அளவில் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 14 தொடங்குவதற்கு ஏழு நாட்கள் முன்பே rose day,teddy day,chocolate day என கொண்டாடி காதலர்கள் தங்களின் அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த வகையில் பிப்ரவரி 14ம் தேதிக்கு முந்தைய தினம் kiss day – வாக கொண்டாடப்படுகிறது.
முத்தம் கொடுத்துக் கொள்வது என்பது வெளிநாடுகளில் சாதாரண விஷயம் என்றாலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் முத்தம் என்பது காமம் கலந்தது என்று அனைவரிடமும் ஒரு கருத்து உள்ளது. ஆனால் முத்தம் என்பது ஒருவர் மீது உள்ள நம்பிக்கையை உணர்த்தும் அன்பின் வெளிப்பாடு..
தாயின் மீது குழந்தை வைத்திருக்கும் அன்பு, மகளின் மீது அப்பா வைத்திருக்கும் அன்பு, காதலன் மீது காதலி வைத்திருக்கும் அன்பு இவை அனைத்துமே விவரிக்க முடியாதவை. எனவே முத்து தினமான இன்று உங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் உங்கள் முத்தத்தை பகிர்ந்து உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள் அது உங்கள் அப்பா, அம்மா,அண்ணன் யாராக வேணாலும் இருக்கலாம்.
இந்த உலகிலேயே பணம் கொடுத்து வாங்க முடியாத ஒன்று என்றால் அது அன்பு மட்டுமே. எனவே உங்கள் மீது உண்மையான அன்பு வைத்திருப்பவர்களை நேசியுங்கள் வாழ்க்கை அழகாக இருக்கும்.