நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்திலும் 1.08 சதவீதமாகவே தொடர்கிறது.
தொடர்ந்து மூன்று மாதங்களாக மொத்த விலை பணவீக்க விகிதம் குறைந்து வந்த நிலையில், ஜூலை மாதம் போன்றே ஆகஸ்ட் மாதமும் 1.08 சதவீதமாக உள்ளது. ஜூலை மாதம் இது 3.15 ஆக இருந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை பணவீக்க விகிதம், லேசாக உயர்ந்து 3.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உணவுப் பொருட்கள் பணவீக்கம் 5.75 சதவீதம் ஆகவும் பழங்கள், காய்கறிகள், கோதுமை மற்றும் பால் உள்ளிட்டவற்றிக்கான மொத்த விலை பணவீக்கம் 1.3 சதவீதமாகவும் உள்ளது.
Discussion about this post