உங்கள் வாழ்க்கையில் “சிங்கப்பெண்ணே” யார்?

நடிகர் விஜய் நடிக்கும் பிகில் திரைப்படத்தில் “சிங்கப்பெண்ணே” பாடல் கடந்த 23ம் தேதி வெளியானது. பெண்களை போற்றும் விதத்தில் அமைந்த இப்பாடல் வரிகள் அனைத்து தரப்பு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, “உங்கள் வாழ்க்கையின் ஏதேனும் ஒரு பெண்ணை ரோல் மாடலாக கொண்டிருப்பீர்கள். அவர்களை பற்றி பதிவிடுங்கள் கொண்டாடலாம்” என்ற ட்வீட்டை வெளியிட அனைத்து ட்வீட்டர்வாசிகளும் தங்கள் அம்மா, சகோதரி, மனைவி, தோழி என அனைவரது புகைப்படங்களையும் பகிர்ந்து #SaluteMySingappenney என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்த வீடியோ ஜூலை 30ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version