இந்தியாவின் தங்கக் கனவை நனவாக்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் இந்திய ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ரா. யார் இந்த நீரஜ்? பெருங்கனவையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய வீரர்கள் பலரும் ஏமாற்றிய நிலையில், எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து தங்கம் வென்று தந்து தனிவரலாறு படைத்திருக்கிறார்.
அரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த இவர், 1997ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி பிறந்தார்.
ஒலிம்பிக் வீரராக அறியப்பட்ட போதும், இவர் தரைப்படையில் (Armed Forces) சுபேதார் நிலையில் பணியாற்றி வருபவர் என்பது கவனிக்கத்தக்கது.
தற்போது ஒலிம்பிக் போட்டியில் 87.58மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முன்னதாக, இவர் ஆசிய விளையாட்டு, காமன்வெல்த், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உலக இளையோர் தடகள போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.