உயர் பொறுப்பில் இருப்பவர்களை பிளாக் மெயில் செய்து, மிரட்டி பணம் பறிக்கும் செயலை செய்யும் சில பத்திரிக்கைகள் தங்களை புலனாய்வு பத்திரிகை என அழைத்து வருகின்றனர். அவற்றில் ஒன்றான தெகல்காவில் இருந்து வெளிவந்தவர் தான் சாமுவேல் மேத்யூஸ்.
வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வந்த காலகட்டத்தில், அக்கட்சிக்கு எதிராக புலனாய்வு என்கிற பெயரில் தொடர்ந்து பல்வேறு அவதூறுகளை பரப்பிய பத்திரிக்கையே தெகல்கா. பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் 4 மத்திய அமைச்சர்கள் மீது இந்த பத்திரிக்கை சுமத்திய ஆதாரமற்ற குற்றச்சாட்டின் காரணமாக அவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். நிரபாதி என நிரூபித்த பிறகு பதவி ஏற்கலாம் என நினைத்து, அவர்கள் பதவி விலகியதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது தெகல்கா. ஆனால் தெகல்காவின் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எந்த புலனாய்வுச் செய்தியையும் வெளியிடாத இந்த தெகல்கா பத்திரிக்கையில் பணியாற்றிய, மேத்யூஸ் என்ற நபரே, தற்போது, திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக, அதிமுக மீது அவதூறை வாரி இறைத்துள்ளார்.
தெகல்கா நிறுவனத்திற்கு அரசு விளம்பரங்களையும், பொருளாதார உதவிகளை அள்ளி வழங்கி வந்தது கோவாவில் இதற்கு முன் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு. அக்கட்சிக்கு விசுவாசமாக இருந்த தெகல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் 2013 ஆம் ஆண்டு கோவாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு போலீசாரால் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு, சுமார் 1 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். முந்தைய கோவா காங்கிரஸ் அரசு ஸ்பான்ஸர் செய்த, நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது, தனது மகள் வயது சக பத்திரிக்கையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலீசார் அவரை கைது செய்தனர்.
இதில் கொடுமை என்னவென்றால், அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நாடு தழுவிய கேம்பைனை நடத்தியது தெகல்கா என்பது தான். இத்தகைய போலி புலனாய்வு பத்திரிக்கையில் இருந்து வெளிவந்தவர் தான் சாமுவேல் மேத்யூஸ்.
கொடூர குற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு, பல மாதங்களாக விபரங்களை சேகரித்து, ஒரு போலியான வீடியோவை தயாரிக்க வேண்டிய தேவை இவருக்கு எப்படி ஏற்பட்டது. இதற்கு தேவையான பொருளாதார உதவிகளை இவருக்கு வழங்கியவர்கள் யார்? போன்ற பல கேள்விகளுக்கு விடை இல்லை.