சென்னையில் ஜெல்மட் அணியாத வாகன ஓட்டிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் வாங்கும் புதிய விழிப்புணர்வு பிரச்சாரமானது தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டத்தை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்தார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் மூலம் கடந்த ஏழு மாதங்களில் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் அபராதத் தொகை வசூல் ஆகியுள்ளது. ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதத்தொகையும், மது போதையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதத்தொகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அபராதத் தொகையினை வசூலிப்பதைக் காட்டிலும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வே முதலில் அவசியம். எனவே விழிப்புணர்வு பிரச்சாரத்தினை அதிகரிக்கும்படி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் விழிப்புணர்வு பிரச்சாரம் தீவிரமாக தொடங்கப்பட்டு வருகிறது. வருகிற 31-ஆம் தேதி வரையில் மெரினா உழைப்பாளர் சிலை சந்திப்பு, மயிலாப்பூர் லஸ் சந்திப்பு, செண்டிரல் லைட் பாயிண்ட் சந்திப்பு, அண்ணா நகர் ரவுண்டானா சந்திப்பு ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி நன்கு பயிற்சி பெற்ற 120 பள்ளி மாணவ- மாணவிகள் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
உறுதிமொழிப் பத்திரம்..!
இந்த புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்கவிழா நேற்று சென்னை வேப்பரியில் நடைபெற்றது. இதில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்துகொண்டார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் இல்லாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது. மேலும் அவர்களிடம் “இனிமேல் ஹெல்மெட் அணிவேன்” என்று உறுதிமொழி பத்திரம் வாங்கப்பட்டது. பின்னால் ஹெல்மெட் அணியாமல் வந்த பெண்கள் உள்ளிட்டோருக்கும் இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் அதிக சாலை விபத்துகள் ஏற்பட்ட மாநிலங்களில் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட பதினாறாயிரத்திற்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதற்கு விடியா திமுக அரசும், போக்குவரத்து துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
Discussion about this post