ஒட்டன்சத்திரம் அருகே குறைவான நீரில் விளைந்த வெள்ளைச் சோளப் பயிர் மூலம் நல்ல வருமானம் கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனால் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் அதை சரி செய்யும் விதமாக ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், வெரியப்பூர், சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கள் கிணற்றில் உள்ள சிறிதளவு நீரை வைத்து, விவசாயிகள் வெள்ளைச்சோளத்தை பயிரிட்டனர். இதன் மூலம் கிடைத்த தாவரப்பகுதி கால்நடைகளுக்குத் தீவனமாகவும், விளைந்த வெள்ளை சோளம் மூலம் ஓரளவு வருமானமும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Discussion about this post