7 கோடி எங்கே? விஷால் பதில் அளிக்க வேண்டும் – பாரதிராஜா

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிரந்தர வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த 7 கோடி ரூபாய்க்கு சங்க தலைவர் விஷால் உரிய பதில் அளிக்க வேண்டுமென இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சங்க பொதுக்குழுவை கூட்டி 2 ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும், கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்தார்.

 

 

Exit mobile version