சங்க தலைவராக இருப்பதற்கு விஷால் தகுதியற்றவர்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருப்பதற்கு விஷால் தகுதியற்றவர் என்றும் தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒத்துழைப்பும் அவர் வழங்கியதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் மீது தயாரிப்பாளர் சக்திவாசன் குற்றப் புலனாய்வு துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சக்தி வாசன், ராஜா ரங்குஸ்கி படம் தமிழ்ராக்கர்ஸ் மற்றும் பல திருட்டு இனையதளங்களில் வெளியானதை தடுக்க தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில் விஷால் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்திற்கும் விஷாலுக்கும் தொடர்புள்ளது என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version