காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் அமைந்தால் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் கட்டாயம் வழங்கப்படும் என ராகுல்காந்தி உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, துபாயில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, இந்தியாவின் மிக முக்கிய பிரச்சனை, வேலையின்மைதான் என குறிப்பிட்டார். தொடர்ந்து தொழிலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசிய அவர், தொழிலின் நிமித்தமாக குடும்பங்களை பிரிந்து வாழும் தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் என்றும் உறுதுணையாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
Discussion about this post