பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கடந்த 15ம் தேதி அனைத்து மாநில பள்ளிக்கல்விதுறை அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனையில், தமிழகம் உட்பட சில மாநிலங்கள் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யவில்லை என கருத்து தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. டெல்லி, ஆந்திரா, கேரளா, ஹரியானா போன்ற மாநிலங்கள் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளை திறக்கலாம் என தெரிவித்துள்ளதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்து மாநில அரசுகள் பெற்றோர்களிடம் கருத்து கேட்டு 20ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post