வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து வாட்ஸ்அப்பை அப்டேட் செய்ய பயனாளர்களுக்கு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ்அப் கொண்டுள்ளது. குறிப்பாக புகைப்படங்கள், கோப்புகள், வீடியோ என பல்வேறு முக்கிய விஷயங்கள் வாட்ஸ்அப் மூலம் பகிரப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஹேக்கர்கஸ் குழு வாட்ஸ்அப்பை ஹேக் செய்துள்ளதாகவும், அதனால் வாடிக்கையாளர்களின் கணக்குகள் கண்காணிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனை தவிர்க்க வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்யுமாறு பயனாளர்களுக்கு அதன் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது, பிளே ஸ்டோரில் கிடைக்கும் புதிய வாட்ஸ்அப் அப்டேட்டில் அந்த ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் அம்சம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Discussion about this post