வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் செய்திகளை பகிர்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா குறித்த வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனமும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இனி தகவல்களை அதிகபட்சமாக ஒருவருக்கு மட்டுமே Forward செய்ய முடியும். இந்த தகவலை பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் 5 பேருக்கு மட்டுமே ஒரு தகவலை forward செய்ய முடியும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதனை ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என குறைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post