பிக்பாஸ் வீட்டில் இன்னைக்கு என்ன special ?

இன்று பிக்பாஸ் வீட்டில் 93வது நாள்.ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் உள்ளனர்.நேற்று பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவருக்கான டாஸ்க் நடத்தப்பட்டது.அதில் முகென், கவின், சாண்டி கலந்துக்கொண்டனர்.டாஸ்க்கில் முகென் வெற்றிப்பெற்று வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்றைய பிக்பாஸ் வீட்டிற்கு பிக்பாஸ் 2 போட்டியாளர்களான மகத் மற்றும் யாஷிகா வருகின்றனர்.அவர்களை பார்த்தவுடன் சாண்டி ஓடிச்சென்று கட்டிக்கொள்கிறார்.பின்பு போட்டியாளர்களுடன் யாஷிகாவும், மகத்தும் பேசுகையில் அனைவரும் all the best நல்ல பண்ணுங்க என கூறுகின்றனர்.இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் வீட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version