உயிர்கள் வாழ ஏற்ற சூழல்களுடன் வெள்ளிக் கோள் இருந்ததாகவும், மர்மமான ஒரு நிகழ்வுக்குப் பிறகு அந்தக் கோளில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சூரியக் குடும்பத்தில் இரண்டாவது கோளான வெள்ளியில் வளிமண்டலம், பூமியைக் காட்டிலும் 90 மடங்கு திடமானது. சூரியனுக்கு மிக அருகில் உள்ளதால் அந்தக் கோளின் மேற்பரப்பு வெப்ப நிலை 864 டிகிரி செல்சியஸ் ஆகும். வெள்ளிக் கோளுக்கு அருகில் கூடச் செல்ல முடியாது என்ற நிலையில், 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் 68 டிகிரி பாரன்ஹீட் முதல் 122 பாரன்ஹீட் வரையிலான வெப்பம் மட்டுமே நிலவியதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் உள்ள GOD DARD INSTITUTE நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. 300 கோடி ஆண்டுகள் வரை அந்தக் கோளில் பெருங்கடல் மற்றும் நீர் இருந்திருக்கலாம் என்றும், உயிர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் வெப்பநிலை இருந்திருக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஏதோ ஒரு மர்மமான நிகழ்வு தான், அதன் வளிமண்டலத்தைப் பாதித்து விட்டதாக ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post