ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன?

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை பூஜ்யம் புள்ளி இரண்டு 5 சதவீதம் அளவுக்குக் குறைத்து உள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன? அது குறைக்கப்படுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதை தற்போது பார்க்கலாம்…

வங்கிகளிடம் இருந்து மக்கள் கடன் வாங்குவது போல, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்குகின்றன. அந்தக் கடன் தொகைக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டியின் சதவிகிதமே ’ரெப்போ வட்டி விகிதம்’ ஆகும்.

ரிசர்வ் வங்கி தன்னிடம் கடன் வாங்கும் வங்கிகளுக்கு வட்டியைக் குறைக்கும் போது, அதனால் பலன் பெறும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் வாங்கிய கடன்களின் வட்டிகளைக் குறைப்பது வழக்கம்.

ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் குறையும் போது வங்கிகள் வாகனக் கடன், வீட்டுக் கடன் ஆகியவற்றின் வட்டிகளைக் குறைப்பதால் ரெப்போ வட்டி விகிதக் குறைப்பு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்.

இன்னொரு பக்கம் ரிசர்வ் வங்கியும் பிற வங்கிகளிடம் கடன் வாங்கும், இந்தக் கடன்களுக்கு ரிசர்வ் வங்கி செலுத்தும் வட்டியின் சதவிகிதம் ‘ரிவர்ஸ் ரெப்போ ரேட்’ என்று அழைக்கப்படுகிறது.

இன்றைய ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 5.50% ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது. ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியால் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

Exit mobile version