போரில் சிறைப்பிடிக்கப்படும் பிறநாட்டு ராணுவ வீரர்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடாது என்று ஜெனிவா ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலக போருக்கு பிறகு போடப்பட்ட அந்த ஒப்பந்தத்தில் என்னென்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை காணலாம்…
பொதுவாக சண்டையின் போது பிற நாட்டு அரசாங்கத்தால் சிறைபிடிக்கப்படும் வீரர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. உடல் உறுப்புகளை வெட்டி அகற்றுதல் போன்ற கொடூரமான கொடுமைகளை செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முறைப்படி நிறுவப்படாத நீதிமன்றங்கள் மூலம் மரண தண்டனை விதிக்கக் கூடாது என்றும், பிடிப்பட்ட வீரர் பற்றிய தகவலை சொந்த நாட்டிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
காயமடைந்தால் வீரர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளித்து, ஒரு வாரத்திற்குள் சொந்த நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே, ஜெனிவா ஒப்பந்தத்தின் வெளிப்பாடாகும்.
Discussion about this post