2020-2021ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான இன்று தாக்கல் செய்கிறார். இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் நிகழ்வுகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்…
பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக காலை 8 மணிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பசுமைவழிச்சாலையிலுள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்படுகிறார். காலை 8.30 மணியளவில் சட்டமன்ற உறுப்பினர் விடுதியிலுள்ள விநாயகர் கோவிலில் துணை முதலமைச்சர் வழிபாடு செய்கிறார். காலை 9.30 மணிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்திற்கு வந்தடைகிறார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். காலை 10.00 மணிக்கு 2020-2021ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை துணை முதலமைச்சர் தாக்கல் செய்கிறார். 2 மணிநேரத்திற்கு மேலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அலுவல் ஆய்வுக் கூட்டம் சபாநாயகர் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.
Discussion about this post