உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2 வது போட்டியில் பாகிஸ்தான் 105 ரன்களில் சுருண்டதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
12 வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 2வது லீக் போட்டியில் சர்ஃப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் ஜேசன் ஹோல்டர் தலைமயிலான மேற்கிந்திய தீவுகள் அணியும் விளையாடி வருகின்றன. நாட்டிங்காமில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தானை பேட் செய்ய பணித்தது. அதன் படி விளையாடிய பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஸாமன் மற்றும் பாபர் அஸாம் ஆகியோர் அதிக பட்சமாக தலா 22 ரன்கள் எடுத்தனர். 21 புள்ளி 4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்த பாகிஸ்தான் அணி, 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஒஷேன் தாமஸ் 4 விக்கெட்டுகளையும் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Discussion about this post