உல்லாச வாழ்க்கை… பழகுவதற்கு பல ஆண் நண்பர்களின் நட்பு… உடல் முழுவதும் மாடல் அழகிகளை போல டேட்டுக்கள்… கவர்ச்சியான உடைகள் என மனம் போன போக்கில் வாழ்ந்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம்பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கொலை நடந்த பன்னிரண்டே மணி நேரத்தில் 2 குற்றவாளிகளை தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
சென்னை, அண்ணாநகர், எச்.பிளாக், 18-வது தெருவைச் சேர்ந்தவர் டேட்டூ அழகி பிங்கி. கணவர் உத்தம் மண்டலை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் திரைத்துறையைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் டேட்டு பிரியர்களுக்கு டேட்டு போடுதல் மற்றும் சேலை விற்பனை செய்து வந்ததார்.
இந்நிலையில் நேபாளத்தை சேர்ந்த கிருஷ்ணன், என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஆறு மாதமாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இருவருமே குடிப்பழக்கம் உள்ளவர்கள். கடந்த 4 ஆம் தேதி இரவு, வெளியே சென்று வந்த கிருஷ்ணன், பிங்கி குளியலரையில் மயங்கி கிடப்பதாக மேல்வீட்டில் வசிப்பவரிடம் கூறியுள்ளார். அவர்கள் வந்து பார்த்த பொழுது ரத்த காயங்களுடன் இருப்பதை பார்த்து காவல் கட்டுபாட்டறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் காவல்துறை விசாரணையில் இயற்கைக்கு மாறான முறையில் இறந்துகிடந்தது தெரிந்தது. உடனே உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிருஷ்ணனை காவல் நிலையைத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் கொலைக்கும் அவருக்கும் தொடர்பு இல்லாதது தெரியவந்தது.
விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை அந்தப் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது இரண்டு நபர்கள் வந்து சென்றது தெரியவந்தது. பிங்கியின் செல்போனில் பதிவான எண்களை வைத்து வடமாநிலத்தைச் சேர்ந்த விகாஷ் சர்மா, விகாஷ் குமார் ஆகிய இருவரை திருமங்கலம் காவல்துறை கைது செய்தனர்.
விசாரணையில் பல ஆண் நண்பர்களுடன் பணத்திற்காக பிங்கி பழகியது தெரியவந்துள்ளது. கொலை நடந்த அன்று 2 இளைஞர்களும் பிங்கியுடன் மதுகுடித்துவிட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால் பேசிய படி, பிங்கிக்கு அவர்கள் பணம் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக பிங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த இளைஞர்கள் பிங்கியை குளியலறையில் வைத்து கொன்றுவிட்டு, அவரது செல்போனையும் எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.
தவறான தொடர்புகள், உல்லாசமான வாழ்க்கை, மதுபோதை என்று திளைப்பவர்களுக்கு பிங்கியின் மரணம் ஒரு பாடம்.
Discussion about this post