தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். 2014 ஆம் ஆண்டு தேர்தல் செலவினங்களை ஒப்பிடும் போது, 2019 நாடாளுமன்ற தேர்தல் செலவினங்கள் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக வெளியான செய்தியை ஒப்பிட்டு, பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். இதே நிலை தொடர்ந்தால், 2024ஆம் ஆண்டு தேர்தல் செலவுகள் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்றும், ஊழல் இல்லாத நேர்மையான தேர்தல் நடைபெற காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் மம்தா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே தேர்தலுக்காக அதிகம் செலவு செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மையாக உள்ளதாகவும், 2019ஆம் ஆண்டு தேர்தலில் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சிகள் தேர்தல் செலவுகளை செய்யாமல், அரசே தேர்தல் செலவுகளை ஏற்பதன் மூலம், ஊழல் இல்லாத தேர்தலை நடத்த முடியும் என்றும், தேர்தல் சீர்திருத்தத்தை மேற்கொள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தை பிரதமர் கூட்ட வேண்டும் எனவும் மம்தா பானர்ஜி கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post