சென்னையில், பாரம்பரிய விளையாட்டுகள் குறித்து நடைபெற்ற ஆரோக்கிய திருவிழாவில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் தனியார் அமைப்பு நடத்திய உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய திருவிழா நடைபெற்றது. தற்போதைய கால கட்டத்தில் நிலவும் உடல் சார்ந்த குறைபாடுகளை தடுக்கும் வகையில், பாரம்பரிய உடற்பயிற்சி குறித்த விழிப்புணார்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. யோகா, ஜூம்பா அமர்வுகள், பளுதூக்குதல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி அரங்குகள் அமைக்கப்பட்டு வில்வித்தை, ஓட்டப்பந்தயம், உள்ளிட்ட உள்ளரங்கு போட்டிகளும் நடத்தப்பட்டது. மேலும், பாரம்பரிய கலைகளான களரி, கரலாகட்டை போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர்.
Discussion about this post