ஆப்ரிக்கா கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அல்ஜீரியா அணிக்கு சொந்த மண்ணில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆப்ரிக்கா கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் அல்ஜீரியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆப்ரிக்க நாட்டு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த தொடர் ஜூன் 21ம் தேதி எகிப்தில் தொடங்கியது. மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றன. கெய்ரோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அல்ஜீரியா – செனகல் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் அல்ஜீரியா 1 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வென்று, 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்த நிலையில் ஆப்ரிக்கா கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அல்ஜீரியா அணிக்கு, சொந்த மண்ணில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Discussion about this post