பக்ரைன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐந்து நாட்கள் அரசு முறைப் பயணமாக, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக பிரான்ஸ் பயணத்தை முடித்து, ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாடு சென்றார். அந்நாட்டின் மிக உயரிய விருதான, ‘ஆர்டர் ஆப் சயீத்’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஐக்கிய அரசு எமிரேட்ஸ் பயணத்தை முடித்த மோடி பக்ரைன் சென்றார். மனாமா நகர் அரண்மணையில் அந்நாட்டு இளவரசர் கலிபா பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பக்ரைன் வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
பின்னர், பக்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலிஃபாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது மறுமலர்ச்சியின் மன்னர் ஹமாத் எனப்படும் ஆணையை பிரதமர் மோடிக்கு மன்னர் ஹமத் பின் இசா அல் கலிஃபா வழங்கினார்.
Discussion about this post