குறிஞ்சிப்பாடியில் நசிந்து வரும் கைத்தறி நெசவுத்தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமென அரசாங்கத்திடம் நெசவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கைத்தறி நெசவுத்தொழில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கச்சாப் பொருள்களின் விலை உயர்வு, மூலப்பொருள்கள் தட்டுப்பாடு காரணமாக கைத்தறி உற்பத்தி செய்வதில் நெருக்கடி அதிகரித்துள்ளது. மேலும் கைத்தறிக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேட்டி, துண்டு, சேலை உள்பட 11 ரகங்களும் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்டு, கைத்தறி உற்பத்தி விலையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் கூட்டுறவு சங்கங்களில் கைத்தறி துணிகள் தேக்கமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் மிகப்பெரிய அளவில் நசிந்து வரும் நெசவுத்தொழிலை காக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.