தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளதாக,சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா, வரும் 6 ம் தேதி தெற்கு வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக கூறிய அவர், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழை பெய்வதற்கான சூழல் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார். இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஸ்டெல்லா தெரிவித்தார்.
Discussion about this post