வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடிக்க எல்லா வழியிலும் முயற்சி செய்வோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோருக்காக பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி போன்ற கட்சிகள் எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவதில்லை. இது போன்ற நிலைப்பாடு வயநாடு தொகுதியில் இருக்காது என கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி அதிரடியாக அறிவித்து உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்து உள்ளது. ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் போட்டியில் இருந்து விலகும் எண்ணம் சிறிதும் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய அக்கட்சியை சேர்ந்த சுதாகர் ரெட்டி, தேசிய அளவில் இடதுசாரிகள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக களமிறங்கி இருக்கும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த போட்டி நல்லதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதிக்கு பதில் பாரதீய ஜனதா வலுவாக இருக்கும் தொகுதிகளில் ஒன்றை ராகுல் காந்தி தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும் சுதாகர் ரெட்டி விமர்சித்துள்ளார்.
Discussion about this post