இந்தியாவிலேயே தமிழகத்தை முன் மாதிரி மாநிலமாக மாற்றுவோம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கீரிப்பட்டியல் அதிமுகவினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய அவர், விவசாயிகளையும், விவசாயத்தையும் தனது அரசு பாதுகாத்து வருவதாகவும், அதன் ஒருபகுதியாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1519 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.தான் இன்றும் விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். மக்கள் பணியாற்றும் அரசாக அதிமுக உள்ளதாகவும், இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்றும் குறிப்பிட்டார். அதிமுகவை முடக்க நினைத்தவர்களின் சதியை தொண்டர்கள் முறியடித்து விட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
Discussion about this post