2021 டிசம்பரில் நிலவுக்கு இந்தியரை அனுப்ப உள்ளதாக, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ககன்யான் திட்டம் மூலம் 2021ம் ஆண்டு டிசம்பரில் நிலவுக்கு இந்தியர்களை அனுப்ப உள்ளதாக தெரிவித்தார். ககன்யான் திட்டத்தற்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
2020 டிசம்பர் மற்றும் 2021 ஜூலையிலும் ஆளில்லா விண்கலத்தை அனுப்ப உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ககன்யான் குழுவினர் இதற்காக தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் இந்த ஆண்டு 32 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post