விவசாயம், விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கினால் மட்டுமே மத்திய அரசின் மின் திருத்த சட்டத்தை தமிழக அரசு ஏற்குமென மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, உதய் திட்டத்தை மாற்றங்களுக்கு பிறகே ஏற்றதை போல் விவசாயம், விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கினால் மட்டுமே மத்திய அரசின் மின் திருத்த சட்டத்தை தமிழக அரசு ஏற்கும் எனக் கூறினார். இலவச மின்சாரம் ரத்து என கூறி போராட்டம் நடத்துபவர்கள் அரசியலுக்காகவே போராட்டம் நடத்துகின்றனர் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
Discussion about this post