வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இவ்வுலகில் நாமும் வேகமாக பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்… இந்த வேகமான பயணத்தில், என்னதான் செல்வங்களை நாம் சேர்த்தாலும், நம் வருங்கால சந்ததியினருக்கு தூய்மையான காற்று, நல்ல குடிநீர், கிடைக்க வழிவகை செய்தோமா என்பதை சிந்திக்க செய்யும் செய்தி தொகுப்பை காணலாம்…
நாமும் நல்லா இருக்கணும், நம்மள சுத்தி இருக்கிறவங்களும் நல்லா இருக்கணும் என்று சொல்லிக் கொண்டிருந்த காலம் மாறி, நான் மட்டும் நல்லா இருந்தா போதும் என்கிற மனோபாவத்தில் சென்று கொண்டிருக்கிறோம்…
காலை எழுந்தது முதல், குளியலுக்கு பயன்படுத்தும் சோப்பு, அதனால் வெளியேறும் கழிவு நீர், வாகன புகை, அதனால் ஏற்படும் காற்று மாசு, பொது இடத்தில் எச்சில் துப்புதல், புகைபிடித்தல், தெருவில் குப்பைகளை கொட்டுதல், போன்ற பல்வேறு செயல்களால் அன்றாடம் நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.
காற்று மாசு ஏற்படுவதால் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவற்றில் சருமம் சார்ந்த பிரச்சினையும் அதிகரித்து வருவதாக கூறுகிறார் சருமப் பராமரிப்பு நிபுணர் ராஜாத்தி காளிமுத்தன்.
தமிழகத்தின் பெருநகரங்களில் மாநகராட்சிகளால் எடுக்கும் குப்பைக்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் சேகரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை மூலம் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. ஆனால் அனைத்துமே அரசாங்கம் பார்த்துகொள்ளும் என்று நினைத்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் மனப்பான்மையை நீக்கி, ஒவ்வொரு குடிமகனும் சுற்றுச்சூழல் மீது ஆர்வமுள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.
வருடம்தோறும் இதை ஒரு நாளாக மட்டும் கடைபிடிக்காமல், வாரத்தில் ஒருநாள் இருசக்கரம், மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்காமல் இருத்தல், மரங்களை நடுதல், போன்ற செயல்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு, எதிர்கால சந்ததியினர் வாழ ஏதாவது ஒரு வாழ்வியல் நடைமுறையை கடைபிடிப்போம்…
Discussion about this post