அடுத்த 5 ஆண்டுகளில் நாடு அடைய வேண்டிய வளர்ச்சி தொடர்பான அனைத்து திட்டங்களையும் தொடங்கி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
73-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய பின்னர் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதில் ஜம்மு காஷ்மீரை ஆட்சி செய்தவர்கள் இதுவரை எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை என குற்றம்சாட்டினார். ஜம்மு காஷ்மீரின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை மக்கள் கொண்டாடுவதாகவும், இதன் மூலம் வல்லாபாய் பட்டேலின் கனவு நினைவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 70 ஆண்டுகளில் செய்யாத சாதனைகளை 5 ஆண்டுகளில் நிகழ்த்தி உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் மோடி, முத்தலாக் தடை மசோத மூலம் இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படுவதை மத்திய அரசு தடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கூறிய பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே அரசியல் அமைப்பு சட்டம் என்பதை செயல்படுத்தியதில் பெருமிதம் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
தண்ணீரின் அவசியத்தை உணர்த்தி பேசிய பிரதமர், நீரின்றி அமையாது உலகு என திருக்குறளை சுட்டிக்காட்டி, நீரை மக்கள் சிக்கமான பயன்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
Discussion about this post