கொரோனா வைரஸை பற்றி அறிந்து கொள்ளவும், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கூகுள் துணை நிறுவனமான வெரிலி தனி இணைய தளத்தை உருவாக்கியுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 ஆயிரத்து 526 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளிடையே இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் பற்றி பறிசோதனை செய்து கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்து கொள்ளவும் வெரிலி நிறுவனம் தனி இணையதளத்தை உருவாக்கி உள்ளது. கூகுளின் துணை நிறுவனமான வெரிலி முதற்கட்டமாக அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இந்த இணையதளத்தை துவக்கியுள்ளது.
இதனை பயன்படுத்துவோர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், கூகுளில் கணக்கு வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும். சுய விவரங்களை பதிவு செய்யவும், இந்த விவரங்கள் அரசு துறையுடன் இணைத்து கொள்ளப்படும் போன்ற பல்வேறு நிபந்தனைகளை கூகுள் விதித்துள்ளது. இந்த இணையதளத்திற்கு ப்ராஜக்ட் பேஸ்லைன் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இது செயல்படும் விதத்தை பொறுத்து மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Discussion about this post