‘காதல்’ என்கிற பெயருக்கு அவ்வளவு வரவேற்பு உள்ளது. கடைக்கோடி முக்கில் கூட ஏதோ ஒரு காதல் உருவாகி கொண்டுதான் இருக்கிறது. அப்படி உருவான காதலை வித்தியாசமான முறையில் காதலியிடம் ஓகே வாங்கியுள்ளார். ஒரு இளைஞர்.
இங்கிலாந்து நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கிளவ்ஸ்டர் என்கிற பகுதியில் உள்ள ஒரு இளைஞர் ஒன் சைடாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவருடைய காதலை சொல்ல ஒவ்வொரு முறையும் முயற்சிக்கும் போதும் அது தோல்வியில் தான் முடிகிறது என்று வருத்தப்பட்டுள்ளார்.
விடா முயற்சியில் ஒரு நாள் தனது காதலியை அழைத்து கொண்டு டாட்டூ குத்தும் ஸ்டூடியோவிற்கு சென்று உள்ளார். எதற்காக அழைத்து வந்தான் என தெரியாமல் அந்த பெண் இளைஞரிடம் “ஏன் இங்க வந்துள்ளோம்” என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த இளைஞர் “டாட்டூ குத்த போகிறேன்” என்று கூறியுள்ளார். பின்பு, “டி சர்ட்டை கழட்ட போகிறன். கொஞ்சம் கூச்சமா இருக்கு. அதனாலே நீ கொஞ்சம் நேரம் வெளியில் இரு” என்றார். சரி, என்று சிரித்துக் கொண்டே காதலி வெளியே சென்று விட்டார்.
அதன் பிறகு டாட்டூ குத்த ரெடியாகும் நபரிடம் “என் காதலியிடம் காதல்லை சொல்லப்போகிறேன் அதற்காக வித்தியாசமான முறையில் செய்ய ஆசைப்படுகிறேன். அதனால், எனது நெஞ்சில் ‘Will U Marry Me’ என எழுதுங்கள் பக்கத்துலே‘Yes , No’என இரண்டு பாக்ஸ் போடுங்கள்” என்று கூறியுள்ளார்.
டாட்டூ குத்தி முடிந்த உடன் தனது காதலியை அழைத்து வந்து நெஞ்சை காண்பித்து உள்ளார். காதலியின் முகத்தில் புன்னகையுடன், ஒரு வெட்கம். அத்துடன் Yes என்ற பாக்ஸை தொட்டு உள்ளார். அவர் தொட்ட Yes என்கிற பாக்ஸில் ஒரு ஆட்டின் வடிவத்தை டாட்டூவாக மீண்டும் குத்தி காதலின் அடையாளத்தை தெரிவித்துள்ளார்.
தற்போது, அந்த ஜோடிக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தையும் முடித்து விட்டார்கள்.
Discussion about this post