ஐபிஎல் தொடரின் மிக முக்கிய போட்டியான இறுதி போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது.இறுதிப் போட்டியின் போது காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து கசியும் ரத்தத்துடன் வாட்சன் விளையாடும் போட்டோ தான் தற்போது டாப் டிரெண்டிங்கில் உள்ளது.
சென்னை அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்ற பெருமை வாட்சனையே சேரும்.இவர் 59 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இருப்பினும் வாட்சன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும். ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் சரியாக ஆடாததால் வாட்சனை பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இருப்பினும் தோனி அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஊக்கம் அளித்தனர். அந்த நம்பிக்கைக்குக் கைமாறாய் தான் வாட்சன் தன் ரத்தம் சிந்தி தன் பங்களிப்பை அளித்துள்ளார் என்று சென்னை ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வாட்சன் காலில் அடிபட்டு ரத்தம் கசியும் புகைப்படத்தைப் பதிவிட்ட அவர், ‘ரன் ஓடும் போது டைவ் அடித்ததில் வாட்சனுக்கு அடிப்பட்டு காலில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதை யாரிடமும் சொல்லாமல் அணிக்காக வாட்சன் விளையாடினார். போட்டிக்கு பின்னர் ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளது ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post