சம்பா சாகுபடிக்கு உரிய நேரத்தில் தமிழக அரசால் தண்ணீர் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசால் 3 ஆவது ஆண்டாக, தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த சொரக்குடி பகுதியில் குடிமராத்து திட்டத்தின் கீழ் குளத்தை தூர்வாரும் பணியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவாரூர் மாவட்டத்தில் குடிமராத்து திட்டத்தின் கீழ் ஆயிரத்து 942 குளங்கள் தூர் வாரப்பட இருக்கின்றன என்றும் தூர்வாருவதற்கு, ஒரு குளத்திற்கு 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை செலவு செய்யப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.
Discussion about this post